Events, Video

சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள்!

சித்திரை புத்தாண்டு என்பது தமிழர்கள் பாரம்பரியமாக புதியதோர் வருடத்தின் வருகையை மகிழ்வோடு வரவேற்று கொண்டாடும் நிகழ்வாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் கனடா, பிருத்தானியா, அவுஸ்திரேலியா மேலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலப் பகுதியாகும்.  பூமி சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணித்தியாலங்களும் 11 நிமிடம், 48 வினாடிகள் ஆகின்றது. இதுவே தமிழ் வருடத்தின் கால அளவாகும். சூரிய பகவான் சித்திரை மாதத்தில், பன்னிரு ராசிகளிலும் முதலாம் ராசியான, மேஷ ராசியில் உதயமாதல் சித்திரை வருடப்பிறப்பு விஷு புண்ணிய காலம் எனப்படுகிறது.  சித்திரைமாதம் பருவ காலங்களிலே இளவேனிற் காலத்தின் முதல் மாதமாகும்.

ஆங்கில நாட்காட்டியில் பெரும்பாலும் ஏப்ரல் மாதம் 14ம் திகதியில் தொடங்கும் தமிழ்ப்புது வருடம் பஞ்சாங்க குறிப்புகள் அடிப்படையில் ஏப்ரல் 13ம் அல்லது 15ம் திகதிகளில் தொடங்குவதாகவும் கணிக்கப்படுகிறது. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த சித்திரைப் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் Chakra 2Go நிறுவனத்தின் அனைத்து உறவுகள், வாடிக்கையாளர்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் மகிழ்ச்சியும் மலர்ச்சியும் பெருகி தீயவை ஒழிந்து நன்மைகள் மேலோங்கிட வாழ்த்துகிறோம்.

நலமும் செல்வ வளமும் பெருகிட, நேற்றைய அனுபவ அறிவைக் கொண்டு இன்றைய நாளைச் செம்மையாக்கி நாளைய வெற்றிக்கான குறிக்கோளை அடைய நாம் முன்னோக்கி அடியெடுத்து வைப்போம். Chakra 2Go நிறுவனத்தின் நண்பர்கள், ஆதரவாளர்கள், வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் எமது மனம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கிறோம். வணக்கம்!

Leave a Reply